ரூ.4,600 கோடிக்கு பிரம்மாண்டமான அதிநவீன சொகுசுக் கப்பலை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

 

ரூ.4,600 கோடிக்கு பிரம்மாண்டமான அதிநவீன சொகுசுக் கப்பலை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்பு கொண்ட பிரம்மாண்டமான அதிநவீன சொகுசு கப்பலை வாங்கியுள்ளார்.

கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்பு கொண்ட பிரம்மாண்டமான அதிநவீன சொகுசு கப்பலை வாங்கியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்பு கொண்ட பிரம்மாண்டமான அதிநவீன சொகுசு கப்பலை வாங்கியுள்ளார். இந்தக் கப்பல் முற்றிலும் திரவ ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கக் கூடியதாகும். ஆனால் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அதிகம் இல்லை என்பதால் கப்பலில் டீசல் கையிருப்பும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சினாட் எனும் டச்சு நிறுவனம் இந்தக் கப்பலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இதில் பல அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளது. சுமார் 3,750 நாட்டிகல் மைல்கள் வரம்பில் அதிகபட்சமாக 17 நாட்ஸ் வேகத்தில் இக்கப்பல் இயங்குமாம். இந்த கப்பலின் நீளம் 112 மீட்டர் ஆகும். அதாவது சுமார் 367 அடிகளாகும்.

ttn

அதிநவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி பார்ப்பதற்கு மிக அழகாகவும் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டு வருவதாக சினாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் மொத்தம் 5 தளங்களை கொண்டது. இதில் 2 வி.ஐ.பி தங்கும் அறைகள், பிரம்மாண்டமான கப்பல் உரிமையாளர் காட்சி அரங்கம், 14 இரட்டைக் குழு அறைகள், 2 அதிகாரி அறைகள் மற்றும் ஒரு கேப்டன் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும் ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு ஹைட்ரோ-மசாஜ் அறை, யோகா அறை, நீச்சல்குளம், ஆரோக்கிய மையம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, ஸ்பா, உட்புறக் குளம் போன்ற பல்வேறு வசதிகளை இந்த சொகுசு கப்பல் கொண்டுள்ளது.

ttn

மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்குச் செல்லும் வகையில் வட்ட வடிவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் 2024-ஆம் ஆண்டுவாக்கில் தான் கடலுக்கு முதன்முறையாக களமிறக்கப்படும் என்று கூறப்படுகிறது.