ரூ.440 கோடிக்கு போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி மோசடி ! ரூ.79 கோடி வரி ஏய்ப்பு முறியடிப்பு !

ரூ.440 கோடிக்கு போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி மோசடி ! ரூ.79 கோடி வரி ஏய்ப்பு முறியடிப்பு !

தமிழகத்தில் 440 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி.யில் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் 79 கோடி ரூபாய்க்கு நடைபெற இருந்த வரி ஏய்ப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதாவது பொருட்களை விற்பனை செய்யாமலே விற்பனை செய்தது போல் போலி பில்களை தயாரித்துள்ளனர்.

தமிழகத்தில் 440 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி.யில் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் 79 கோடி ரூபாய்க்கு நடைபெற இருந்த வரி ஏய்ப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதாவது பொருட்களை விற்பனை செய்யாமலே விற்பனை செய்தது போல் போலி பில்களை தயாரித்துள்ளனர். இதன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி நடைபெற்றுள்ளதாக ஜி.எஸ்.டி. புலனாய்வில் தெரியவந்துள்ளது.

bill

இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இந்த மோசடி தொடர்பாக தனியார் வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குநர் சென்னையில் தெரிவித்தார். மேலும் கைதான நபர் நடத்தியதாக கூறப்படும் நிறுவனங்களை ஆய்வு செய்ய முயன்றபோது அவை அனைத்தும் காலியாக இருந்ததாகவும், ஒரு முகவரியில் டீ கடை இருந்ததாகவம் குறிப்பிட்டுள்ளார். ஒரு பொருளை விற்பதாக இருந்தால் அந்த பொருளை வாங்கியதற்கான ரசீது இருக்க வேண்டும். அப்படி பொருட்களை விற்காமல் ரசீது வழங்கிய நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது ஜி.எஸ்.டி. புலனாய்வு அமைப்பு.
இத்தகைய பரிவர்த்தனைகளில் வங்கி கணக்குகளில் பணம் பரிமாற்றம் என்பது உண்மையானதாகத் தோன்றும் வகையில் போலி விலைப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பொருட்களைப் பெறாமல் மோசடி ஐ.டி.சி.யைப் பெறும் உற்பத்தியாளர்களை சென்றடையும், இந்த விஷயத்தில் அது மெட்டல் ஸ்கிராப் எனப்படும்.

gst

ஜிஎஸ்டி துறையில் பதிவு செய்ய வழங்கப்பட்ட தொடர்பு விவரங்கள் மற்றும் தொடர்புடைய வங்கி கணக்குகள் அனைத்துமே போலி என தெரிவித்த அதிகாரி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போலி நிறுவனங்களால் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.