ரூ.360 கோடிக்கு தீபாவளியன்று மதுபானம் விற்க திட்டம் ! அமைச்சர் மறுப்பு !

ரூ.360 கோடிக்கு தீபாவளியன்று மதுபானம் விற்க திட்டம் ! அமைச்சர் மறுப்பு !

தமிழகத்தில் தீபாவளிக்கு டார்கெட் வைத்து மதுபானம் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கமணி.

தமிழகத்தில் தீபாவளிக்கு டார்கெட் வைத்து மதுபானம் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் தங்கமணி.

thangamani

பொதுவாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். பண்டிகைக் காலம் முடிந்தது மதுபானம் விற்பனை குறித்த விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடும். அதில் சராசரி நாட்களில் விற்பனை ஆவதை விட பண்டிகை காலங்களில்தான் அதிக மதுபானம் விற்பனையாகிறது என்று தெரியவரும். அந்த தகவல்களை பார்க்கும்போது மதுபானம் டார்கெட் வைத்துதான் அரசு விற்பதாக சிலர் குற்றம்சாட்டுவர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணி மதுபானம் விற்பனை 360 கோடி ரூபாய் இலக்கு என சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி வருகின்றனர்.

பொதுமக்களும், ஊடகங்களும் இதை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். எந்த ஆண்டும் பண்டிகை காலங்களில் மதுபானம் டார்கெட் வைத்து விற்கப்படுவதில்லை என அவர் தெரிவித்தார்.