ரூ.3500 கோடி செலவில் விமான நிலையம் – கிளாம்பாக்கம் புதிய மெட்ரோ சேவை திட்டம் !

 

ரூ.3500 கோடி செலவில் விமான நிலையம் – கிளாம்பாக்கம் புதிய மெட்ரோ சேவை திட்டம் !

சென்னையில் பரங்கிமலை- சென்ட்ரல், விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் பக்கத்திலிருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் கூட குறைந்தது 30 நிமிடம் ஆகும். மக்கள் தொகை பெருக்கத்தினால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு இத்தகைய சூழல் நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவைகள் உருவாக்கப்பட்டன.

Metro

சென்னையில் பரங்கிமலை- சென்ட்ரல், விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது விரைவாகச் செல்வதால் மக்களின் பயண நேரத்தை மிச்சப் படுத்துகிறது. சென்னை மக்களிடம் மெட்ரோ சேவை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Metro

மக்களின் தேவையை அறிந்த மெட்ரோ நிர்வாகம், சென்னையில் சேவைகளை இன்னும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன் படி, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் 3,500 கோடி செலவில் இந்த சேவைக்கான பணிகள் 2021 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Metro

இதில், விமான நிலையம் முதல் கிளாம்பக்கம் வரை 13 கி.மீ தூரத்தில் ரயில் பாதை உருவாக்கப்படப் போவதாகவும், அதில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படப் போவதாகவும் தகவல் வெளியாகின்றன.