ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு! ஈரோடு கட்டுமான நிறுவனத்துக்கு செக்!! 

ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு! ஈரோடு கட்டுமான நிறுவனத்துக்கு செக்!! 

ஈரோடு கட்டுமான நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் ரூ. 3,300 கோடி ஹவாலா மோசடி செய்தது வருமான வரித்துறை சோதனை மூலம் தெரியவந்தது. 

ஈரோடு கட்டுமான நிறுவனம் உட்பட சில நிறுவனங்கள் ரூ. 3,300 கோடி ஹவாலா மோசடி செய்தது வருமான வரித்துறை சோதனை மூலம் தெரியவந்தது. 

ஈரோடு தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சோதனை நடந்தது. ஈரோடு, ஹைதராபாத், மும்பை, கோவா, டெல்லி, ஆக்ராவிலுள்ள 42 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின்போது 
கட்டுமான பெண் ஊழியர்கள் நான்கு பேரிடம் கூட்டாக விசாரணை நடந்தது. பின்னர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே விசாரணை நடந்தது. வருமான வரித்துறையிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள், பில்களை ஆதாரமாக கொண்டு சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.  

cash

வருமான வரிசோதனையில் கணக்கில் காட்டாத ரூ.4.19 கோடி மற்றும் ரூ. 3.2 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திராவில் முக்கிய நபர் ஒருவருக்கு ரூ.150 கோடிக்கும் மேல் ரொக்கமாக தரப்பட்டது சோதனையில் அம்பலமாகியுள்ளது.