ரூ. 330 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்!

 

ரூ. 330 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி   மது விற்பனை சுமார் ரூ.330 கோடியை எட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி   மது விற்பனை சுமார் ரூ.330 கோடியை எட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பண்டிகை காலங்களில் விற்பனை இலக்கை நிர்ணயம் செய்தும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு ரூ.350 கோடி மது விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதற்காக அனைத்து மதுபான கடைகளிலும் போதுமான அளவு மது பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது

இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி  கடந்த 3 நாட்களாக மது சுமார் ரூ.330 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70 கோடிக்கு மது அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாளிலும் ரூ.245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மதுவுக்கு எதிரான தீவிரப் போராட்டம் காரணமாக 20 சதவிகிதம் தீபாவளி விற்பனை குறைந்து, ரூ.223 கோடி அளவிற்கே விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.