ரூ.33 ஆயிரத்தில் தங்க விலை.. இரண்டாவது நாளாக குறைவு!

 

ரூ.33 ஆயிரத்தில் தங்க விலை.. இரண்டாவது நாளாக குறைவு!

தங்க விலை நேற்று குறைந்ததைத் தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்டியது. தொடர்ந்து மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. இந்நிலையில் தங்க விலை நேற்று குறைந்ததைத் தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,132க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.33,056க்கு விற்கப்படுகிறது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.48.60க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.900 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.48,600க்கு விற்கப்படுகிறது.