“ரூ.3,000 கோடியில் கட்டப்பட்ட படேலின் சிலை விற்பனை: OLXல் வந்த விளம்பரத்தால் அதிர்ச்சியில் மத்திய அரசு!

 

“ரூ.3,000 கோடியில் கட்டப்பட்ட படேலின் சிலை விற்பனை:  OLXல் வந்த விளம்பரத்தால் அதிர்ச்சியில் மத்திய அரசு!

143-வது பிறந்தநாளையொட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த  சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிட்டு  பிரதமர் மோடி  திறந்து வைத்தார். 

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேலின் நினைவை போற்றும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சிலை அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த  சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிட்டு  பிரதமர் மோடி  திறந்து வைத்தார். 

ttn

இந்நிலையில்  வல்லபாய் படேலின் சிலை விற்பனைக்கு உள்ளதாக மர்ம நபர் ஒருவர் OLX இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அதில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ உள்கட்டமைப்புக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதாலும், மருத்துவமனை கட்டவும் இந்த சிலையை ரூ.30ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ttn

இதுகுறித்து  சிலையின் தலைமை நிர்வாகி குஜராத் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதன் தொடர்ச்சியாக OLX இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்தார் வல்லபாய் சிலை எழுப்பியதற்கே பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிலையால் என்ன பலன் கிடைக்கப்போகிறது. அந்த தொகையை வேறு ஏதாவது திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது சிலையை விற்பதாக எழுந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.