ரூ.3.84 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி கடத்தல்..! இருவர் கைது..

 

ரூ.3.84 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி கடத்தல்..! இருவர் கைது..

திருச்சியிலிருந்து, மலேசியாவுக்குச் செல்லவிருந்த விமானத்தில், திடீரென சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சியிலிருந்து, மலேசியாவுக்குச் செல்லவிருந்த விமானத்தில், திடீரென சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இளையான் குடியைச் சேர்ந்த ஆசாத் என்ற நபரிடம் சோதனை நடத்தப்பட்டது. 

America dollars

அதில் ஆசாத்திடம் இருந்து கைப்பையில் வைத்திருந்த அமெரிக்க டாலர்களும், கருப்பு டேப்பால் சுற்றப்பட்டு ஆசனவாயிலில் மறைத்து வைக்கப் பட்டிருந்த யூரோ கரன்சிகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆசாத் வைத்திருந்த வெளிநாடுகளின் கரன்சிகளின் மதிப்பு ரூ.3.84 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது. 

Euro currency

அதனையடுத்து, கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்தடைந்த மலிண்டா என்ற விமானத்தில், இளையான்குடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஆசனவாயிலில் வைத்துக் கடத்திய ரூ.15 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான 50 சவரன் தங்க நகை  பறிமுதல் செய்யப்பட்டது. 

Trichy airport

ஒரே நாளில், ஒரே பகுதியைச் சேர்ந்த இருவர் திருச்சியிலேயே கடத்தலில் ஈடுபட்டுச் சிக்கியிருப்பது சுங்கத்துறையினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் மற்றும் அப்துல் ரகுமானிடம் சுங்கத் துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.