ரூ. 3 லட்சத்துக்குத் தாத்தா, பாட்டி விற்ற குழந்தை விழுப்புரத்தில் மீட்பு !

 

ரூ. 3 லட்சத்துக்குத் தாத்தா, பாட்டி விற்ற குழந்தை விழுப்புரத்தில் மீட்பு !

சேலம் மாவட்டத்தை அடுத்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ராஜாவும் மீனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை அடுத்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ராஜாவும் மீனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு மீனா வீட்டில் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

baby

ராஜாவும் மீனாவும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு தனியாக வாழ்த்து வந்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்னர், மீனா- ராஜா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. மீனாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் படி, மீனாவின் பெற்றோரிடம் குழந்தையைக் கொடுத்துள்ளனர். ஒரு மாதம் கழித்து அந்த குழந்தையை மீண்டும் கேட்ட மீனாவிடம், அவரது பெற்றோர் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

raaja meena

அதனையடுத்து, அந்த குழந்தையை மீட்டுத் தரும் படி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அந்த தம்பதியினர் கடந்த 18 ஆம் தேதி புகார் அளித்தனர். புகாரின் பேரில்,  ஆட்டையாம்பட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த குழந்தை விழுப்புரத்தில் உள்ள மீனாவின் உறவினர் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு, அந்த குழந்தையை மீட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். மீட்கப்பட்ட அந்த குழந்தை இன்று ராஜா- மீனா தம்பதியினரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.