ரூ.29,999 விலையில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ரூ.29,999 விலையில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் அப்டேட்டட் வெர்ஷனாக நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனை நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனினை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக்/சில்வர், ஐயன்/ஸ்டீல் ஆகிய இருவிதமான நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.0 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி ஃபிளாஷ், 13 எம்.பி இரண்டாவது பிரைமரி, 20 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3500 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.