ரூ.25 லட்சத்தில் ஏரியை தூர்வாரியதாக உடைந்த போர்டு வைத்த அதிகாரிகள்! – அதிர்ச்சியில் முதல்வரின் மாவட்ட மக்கள்

 

ரூ.25 லட்சத்தில் ஏரியை தூர்வாரியதாக உடைந்த போர்டு வைத்த அதிகாரிகள்! – அதிர்ச்சியில் முதல்வரின் மாவட்ட மக்கள்

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாழிக்கல்பட்டி ஊராட்சி. இங்கு பாப்பன்குட்டை என்ற ஏரி ஒன்று உள்ளது. 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு நீர் வரத்து வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டதால் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஏரி ஒன்றை ரூ.25 லட்சத்தில் தூர் வாரியதாக அறிவிப்புப் பலகை ஒன்றை அதிகாரிகள் நட்டுச் சென்றிருப்பது கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாழிக்கல்பட்டி ஊராட்சி. இங்கு பாப்பன்குட்டை என்ற ஏரி ஒன்று உள்ளது. 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு நீர் வரத்து வழிகள் எல்லாம் அடைக்கப்பட்டதால் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை தூர் வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஏரி நிரம்பினால் சுற்ற வட்டாரத்தில் 300 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.

ari

இந்த நிலையில், திடீரென்று ஏரிக்கரையில் அதிகாரிகள் போர்டு ஒன்றை நட்டுச் சென்றுள்ளனர். அதில், அந்த ஏரி ரூ.25 லட்சம் செலவில் தூர் வாரப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நமக்குத் தெரியாமல் எப்போது வந்து தூர் வாரினார்கள், தூர் வாரிய ஏரியில் எப்படி புதர் மண்டி கிடைக்கும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர் கிராம மக்கள்.
அதற்கு அதிகாரிகள் கொடுத்த பதில் அதிர்ச்சி ரகம்… 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஏரி தூர் வாரப்பட்டது என்றும், கூலி மற்றும் தூர் வார இயந்திரங்கள் கொண்டுவந்த செலவு மொத்தம் ரூ.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் யாரும் வேலை செய்யாத நிலையில், முட்புதரும், மேடுமாகக் காட்சி அளிக்கும் ஏரியைப் பார்த்து கிராம மக்கள் வேதனைப்படுகின்றனர். ஏரியை தூர் வாராமலேயே தூர் வாரியதாகக் கணக்குக் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரியை உடனடியாக தூர் வாரித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது அதிகாரிகள் துணையோடு இந்த மோசடி நடந்துள்ளதால் அமைதிகாக்குமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் உள்ளது.