ரூ.2,200 கோடி மோசடி! நடுத்தெருவில் நிற்கும் 80 ஆயிரம் பேர்!

 

ரூ.2,200 கோடி மோசடி! நடுத்தெருவில் நிற்கும் 80 ஆயிரம் பேர்!

தமிழகத்தில், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், சில நாட்களிலேயே பணம் இரட்டிப்பாகும் என்கிற நயவஞ்சக வார்த்தைகள், அப்பாவி பொதுமக்கள் இவை மட்டுமே போதுமாய் இருக்கிறது  ஏமாற்று பேர்வழிகளுக்கு. வாசனையான வார்த்தைகள் பேசி, கவர்ச்சிகரமான விளம்பரங்களால் எளிய மக்களிடம் மட்டுமல்லாமல், கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களிடமும் கத்தைக் கத்தையாய் பணத்தை கறந்து விடுகிறார்கள் சிட் பண்ட் நிறுவனங்களை நடத்துபவர்கள்.

தமிழகத்தில், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், சில நாட்களிலேயே பணம் இரட்டிப்பாகும் என்கிற நயவஞ்சக வார்த்தைகள், அப்பாவி பொதுமக்கள் இவை மட்டுமே போதுமாய் இருக்கிறது  ஏமாற்று பேர்வழிகளுக்கு. வாசனையான வார்த்தைகள் பேசி, கவர்ச்சிகரமான விளம்பரங்களால் எளிய மக்களிடம் மட்டுமல்லாமல், கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களிடமும் கத்தைக் கத்தையாய் பணத்தை கறந்து விடுகிறார்கள் சிட் பண்ட் நிறுவனங்களை நடத்துபவர்கள். கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அந்த பகுதியில் சிட் பண்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

theft

தமிழகம்  மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இவரது சிட் பண்ட்டில் பணத்தை டெபாசிட் செய்தனர். இப்படி சுமார் 80 ஆயிரம் பேர் வரையில் இவரது நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்திருக்கின்றனர். இந்த உத்தேச தொகையே 2,200 கோடியைத் தாண்டியது.  வெளிச்சத்திற்கு வராமல் போன தொகை இதைவிடக் கூடுதலாக இருக்கும் என்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்  36 கிளைகளை விரித்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த ரமேஷ், முதிர்வடைந்தும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் தராமல் ஏமாற்றியுள்ளார். 
ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 350 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சிட்பண்ட் அலுவகத்தையும் முற்றுகையிட்டனர். பின்னர், அவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் கொடுக்கும் படி அறிவுறுத்தினார்கள்.