ரூ.20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன இருக்கிறது?…. மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் திக்விஜய சிங்…

 

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன இருக்கிறது?…. மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் திக்விஜய சிங்…

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன இருக்கிறது என மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளார் திக்விஜய சிங்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங், அம்மாநில முன்னாள் அமைச்சருமான பி.சி. சர்மாவுடன் இணைந்து விடிஷா நெடுஞ்சாலையில் வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு நடந்தே வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு காலணி, உணவு, தண்ணீர் வழங்கினார். மேலும் புலம்பெயர்ந்தவர்களிடம் அவர்கள் கனிவாக பேசி ஆறுதல் படுத்தினர். இதற்கிடையே திக்விஜய சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

புலம் பெயர்ந்தவர்கள்

கொரோனா வைரஸால் நடைமுறையில்  உள்ள லாக்டவுனால் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் பஸ்கள் மற்றும் டிரக்குகளில் பயணம் செய்ய தள்ளப்பட்டனர் மற்றும் ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை செலுத்த நிர்பந்திக்கப்பட்டனர். நான் மோடி அரசிடம் கேட்க வேண்டும், ரூ.20 லட்சம் கோடி பொருளாதார தொகுப்பில் புலம்பெயர்ந்தவர்களுக்கு என்ன இருக்கிறது?.

பிரதமர் மோடி

மத்திய அரசு இந்த சூழ்நிலையை சமாளிப்பதில் தோற்று விட்டது. மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் போலீசாரால் தாக்கப்பட்டனர். இது வெட்கக்கேடானது. மத்திய அரசு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.