ரூ.2.22 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 743 புள்ளிகள் உயர்ந்தது…

 

ரூ.2.22 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 743 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் அமோக இருந்தது. சென்செக்ஸ் 743 புள்ளிகள் உயர்ந்தது.

லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்படும் என்ற நம்பிக்கை காரணமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீளும் வகையில் பொருளாதார தொகுப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் முதலீடு செய்ய இருப்பது போன்ற தகவல்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்றம் கண்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, நெஸ்லே இந்தியா, மாருதி, ஹீரோமோட்டோகார்ப் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி., எல் அண் டி மற்றும் பவரிகிரிட் உள்பட 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஒ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,298 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,088 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.60 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.22 லட்சம் கோடி லாபம் பார்த்தனர்.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 742.84 புள்ளிகள் உயர்ந்து 31,379.55 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 205.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,187.30 புள்ளிகளில் முடிவுற்றது.