ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

 

ரூ.2 ஆயிரம்  சிறப்பு நிதிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

hc

இதன் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயன்பெறும் என தெரிவித்த முதல்வர், சிறப்பு நிதி வழங்குவதற்காக ரூ1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அறிவிப்புக்கு எதிராக  சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்  சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்பு சட்டவிரோதம் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள இம்மனுவானது நாளை விசாரணைக்கு வருகிறது.