ரூ.1,999 விலையில் ஓராண்டு வேலிடிட்டியுடன் வோடபோன் புதிய பிரீபெய்டு பிளான் அறிவிப்பு

 

ரூ.1,999 விலையில் ஓராண்டு வேலிடிட்டியுடன் வோடபோன் புதிய பிரீபெய்டு பிளான் அறிவிப்பு

வோடபோன் நிறுவனம் ஓராண்டு வேலிடிட்டி உடன் கூடிய ரூ.1,999 விலையில் புதிய பிரீபெய்டு பிளானை அறிவித்துள்ளது.

டெல்லி: வோடபோன் நிறுவனம் ஓராண்டு வேலிடிட்டி உடன் கூடிய ரூ.1,999 விலையில் புதிய பிரீபெய்டு பிளானை அறிவித்துள்ளது.

தற்போது ஓராண்டு வேலிடிட்டி உடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களுக்கான சீசன் போலும். ஏற்கனவே ஏர்டெல் நிறுவனமும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ரூ.1,699 விலையில் ஒரு வருட வேலிடிட்டி கொண்ட பிரீபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், அந்நிறுவனங்களின் பிளான்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் வோடபோன் நிறுவனம் ஓராண்டு வேலிடிட்டி உடன் கூடிய ரூ.1,999 விலையில் புதிய பிரீபெய்டு பிளானை அறிவித்துள்ளது.

அதன்படி வோடபோனின் இந்த புதிய திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1.5 ஜிபி 2ஜி/3ஜி/4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முதற்கட்டமாக கேரளாவில் மட்டும் வோடபோன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்தியாவின் மற்ற பகுதி வாடிக்கையாளர்களுக்கும் இது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.