ரூ.18-க்கு அன்லிமிட்டெட் கால், அன்லிமிட்டெட் டேட்டா பிளான்: பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

 

ரூ.18-க்கு அன்லிமிட்டெட் கால், அன்லிமிட்டெட் டேட்டா பிளான்: பிஎஸ்என்எல் அதிரடி சலுகை

ரூ.18-க்கு அன்லிமிட்டெட் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்கள், அன்லிமிட்டெட் டேட்டா பிளான் வழங்கும் அதிரடி சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது

டெல்லி: ரூ.18-க்கு அன்லிமிட்டெட் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்கள், அன்லிமிட்டெட் டேட்டா பிளான் வழங்கும் அதிரடி சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, நிகழ்ந்த  மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல்  போன்ற முன்னணி நிறுவனங்கள் பல சந்தையில் தோல்வியை தழுவின. அந்த வகையில், டெலிகாம் சந்தையில் கடுமையான போட்டியை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், அந்நிறுவனம் அதிரடி சலுகைகளை கடந்த சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், ரூ.18-க்கு ரீச்சார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் வீடியோ மற்றும் வாய்ஸ் கால்கள், அன்லிமிட்டெட் டேட்டாக்களை இரண்டு நாட்களுக்கு பெற முடியும். ஜியோ நிறுவனத்தின் ரூ.19-க்கு ரீச்சார்ஜ் செய்தால் 0.15GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 20 எஸ்எம்எஸ்-களை நாளொன்றுக்கு பெறக்கூடிய திட்டத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.18 ரீச்சார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதேபோல், பிரீமியம் ரீச்சார்ஜ் திட்டம் மூலம் பெறக் கூடிய சலுகைகளையும் 18 சதவீதம் பிஎஸ்என்எல் உயர்த்தியுள்ளது. அதன்படி, ரூ.1,801 ரீச்சார்ஜ் செய்தால் ரூ.2,125 டாக் டைம் மற்றும் 15 ஜிபி டேட்டாக்களையும், ரூ.1,201 ரீச்சார்ஜ் செய்தால் ரூ.1,417 டாக் டைம் மற்றும் 10 ஜிபி டேட்டாக்களையும், ரூ.601 ரீச்சார்ஜ் செய்தால் ரூ.709 டாக் டைம் மற்றும் 5 ஜிபி டேட்டாக்களையும் பெற முடியும். இந்த சலுகைகளை, அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பெறலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.