ரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு: 9 வது முறையாக ஏலம் எடுத்த விவசாயி!

 

ரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன விநாயகர் லட்டு: 9 வது முறையாக ஏலம் எடுத்த விவசாயி!

கடந்த வருடம் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது  குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் : ஐதராபாத் அருகே விநாயகர் லட்டு ஒன்று ரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்வது வழக்கம். பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரம்மாண்டமாக வைத்து அசத்துவார்கள். ஆனால் ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் சற்று வித்தியாச சம்பவம் ஒன்று நடைபெறும். அதாவது  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுகளை ஏலம் விடுவது வழக்கம். கடந்த  1994 ஆம் ஆண்டு லட்டு ஏலத்தில் விடும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 

vinayagar

அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த ஆண்டும் விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது. 21 கிலோ எடை கொண்ட இந்த லட்டுவை ஏலத்தில் எடுக்கக் கடுமையான போட்டி நடைபெற்றது. கடைசியில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி, 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு லட்டை ஏலம் எடுத்தார். இவர் ஏற்கனவே 8 முறை இதுபோன்று லட்டை ஏலத்தில் எடுத்துள்ளாராம். 

vinayagar

கடந்த வருடம் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது  குறிப்பிடத்தக்கது.