ரூ.1600 கோடிகளுடன் களமிறங்கும் சசிகலா! வழக்கறிஞர் தகவல்!

 

ரூ.1600 கோடிகளுடன் களமிறங்கும் சசிகலா! வழக்கறிஞர் தகவல்!

தமிழகத்தின் அரசியலையே மாற்றியமைத்த வழக்காக கருதப்படுகிறது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் வழக்கு. கடந்த 2017 – ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக சோதனைகள் நடைபெற்றது.

தமிழகத்தின் அரசியலையே மாற்றியமைத்த வழக்காக கருதப்படுகிறது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் வழக்கு. கடந்த 2017 – ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாக சோதனைகள் நடைபெற்றது. சோதனைகளில் முடிவில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1500 கோடிகள் வரையில் வரி ஏய்ப்பு செய்ததும், பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் சிக்கின. 

sasikala

தற்போது சசிகலாவின் ரூ.1600 கோடிக்கு மேலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், சசிகலாவின் சொத்துகள் முடக்க பட்டதாக பரவி வரும் தகவல்கள் தவறானது. 2017ம் ஆண்டு முடக்கப்பட்ட சொத்துக்கள் உரிய ஆவணங்களை சமர்பித்த பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

senthurupandiyan

ஆக, தற்போது பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையிலிருந்து வெளியில் வரும் போதே ரூ.1600 கோடிகளுடன் தமிழக அரசியலில் மீண்டும் கால் பதிக்கிறார்.