ரூ.13,500 கோடிக்கு ஆந்திர துறைமுகத்தை வாங்கும் அதானி!

 

ரூ.13,500 கோடிக்கு ஆந்திர துறைமுகத்தை வாங்கும் அதானி!

ரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் அதானி. இவரது நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய பாய்ச்சலை சந்தித்துள்ளது. உலகம் முழுக்க முதலீடுகளை செய்யும் அளவுக்கு அதானி நிறுவனம் வளர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தை வாங்குவதற்கான முயற்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களுள் ஒன்றான அதானி, ரூ.13,500 கோடியில் ஆந்திராவில் உள்ள ஒரு துறைமுகத்தை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர் அதானி. இவரது நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய பாய்ச்சலை சந்தித்துள்ளது. உலகம் முழுக்க முதலீடுகளை செய்யும் அளவுக்கு அதானி நிறுவனம் வளர்ந்துள்ளது. இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தை வாங்குவதற்கான முயற்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கிருஷ்ணபட்டணம் போர்ட் கோ லிமிடெட் என்ற தனியார் துறைமுகத்தின் 75 சதவிகித பங்குகளை அதானி ரூ.13.5 ஆயிரம் கோடியில் வாங்க உள்ளதாக அதானி போர்ட்ஸ் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுக நிறுவனம் இணைந்து அறிவித்துள்ளன. 

adani-port

அதானி நிறுவனம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 400 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக மாற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒர் பகுதியாக இந்த விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணபட்டணம் துறைமுகம் ஆண்டுக்கு 54 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது. இந்த துறைமுகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இன்னும் அதிக அளவிலான சரக்குகளைக் கையாள அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தை அதானி வாங்குவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான இறுதி ஒப்புதலை மத்திய துறைமுக கட்டுப்பாட்டு ஆணையம் வழங்க வேண்டும். 120 நாட்களுக்குள் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்ததும் நிதி பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும், துறைமுகம் முழுக்க அதானி வசம் வரும் என்றும் கூறப்படுகிறது.