ரூ. 1,200 கோடி ஒதுக்கப்பட்டு மீனவ மக்கள் சமூக, கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார்

 

ரூ. 1,200 கோடி ஒதுக்கப்பட்டு மீனவ மக்கள் சமூக, கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண நடவடிக்கை : அமைச்சர்  ஜெயக்குமார்

1,200 கோடி ரூபாய் செலவில் சமூக பொருளாதாராகல்வியில் மீனவ சமுதாய மக்கள்  முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி நாகூரில் பட்டினச்சேரி வெட்டாற்று வடகரையின் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்கப் படுமா என்றும் நகைப்பட்டினத்தில் தனியார் கப்பல்கள்  வந்து செல்ல  மணல் காெட்டி மணல்மேடு உருவாகியிருப்பதால், கப்பல்கள் அதில் மோதி உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். 

ttn

அதற்குப் பதில் அளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நாகூரில் பட்டினச்சேரி வெட்டாற்று வடகரையின் முகத்துவாரத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் 370 கிலோ மீட்டர் தூரம் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நாகப்பட்டினம் அருகே துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார். தொடர்ந்து, தரங்கம்பாடி வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களிலும் மீன் பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் கடந்த காலத்தில் சொற்ப நிதி ஒதுக்கப்பட்டதை போல தற்போது 1,200 கோடி ரூபாய் செலவில் சமூக பொருளாதாராகல்வியில் மீனவ சமுதாய மக்கள்  முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.