“ரூ. 120 குவாட்டர் ரூ.500க்கு விற்பனை” : போலீசில் பிடிப்பட்ட பலே ஆசாமி!

 

“ரூ. 120  குவாட்டர் ரூ.500க்கு விற்பனை” : போலீசில் பிடிப்பட்ட பலே ஆசாமி!

காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

இதுதவிர ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் பலர் மதுபானம் இல்லாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  இதனால் கள்ளச்சாராயம் தயாரித்தல்,மாற்று போதை பொருட்களை குடிப்பது, மதுப்பானங்களை கள்ளச்சந்தையில் விற்பது என பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. 

tt

இந்நிலையில் திருப்பூர் கொடி கம்பம் பகுதியில் வீட்டில் வைத்து மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரன் என்பவர் வீட்டிலிருந்து  277 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், 120 ரூபாய் மதிப்புடைய குவாட்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் பெருமாநல்லூர் சாலை சாந்தி தியேட்டர் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்கள் சட்டவிரோதமாக வாங்கி வந்ததும் தெரியவந்தது. 

இதை தொடர்ந்து  பிடிபட்ட மகேந்திரனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.