ரூ.1000 பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாது ஏன்? தமிழக அரசு விளக்கம்!

ரூ.1000 பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாது ஏன்? தமிழக அரசு விளக்கம்!

வங்கிக் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்படாததற்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வங்கிக் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்படாததற்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், தமிழக அரசு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த பணத்தை அரசு வங்கிக்கணக்குகளில் செலுத்தாமல் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Money

இதற்கு, ரேஷன் அட்டைகளுடன் வங்கிக் கணக்குகள் இணைக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2015ஆம் ஆண்டு ஏற்பட் ட வெள்ளத்தின்போது வீடு வீடாகச் சென்று வங்கிக் கணக்குகள் பெறப்பட்டு வங்கியில் பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதற்கான காலாவகாசம் இல்லை என்பதால் ரேஷன் கடைகளிலேயே ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு கணக்கெடுக்க ஒரு மாதம் ஆகும் என்பதால் கணக்கெடுப்பை தற்போது செய்யவில்லை எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.