“ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்பேன்!” – தன் மீதான குற்றச்சாட்டுக்கு அசாருதீன் மறுப்பு

 

“ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்பேன்!” – தன் மீதான குற்றச்சாட்டுக்கு அசாருதீன் மறுப்பு

டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தன் மீது தெரிவித்துள்ள புகாரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மறுத்துள்ளார்.

மும்பை: டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் தன் மீது தெரிவித்துள்ள புகாரை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் மறுத்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் மற்றும் மேலும் இருவர் இணைந்து தன்னிடம் ரூ.20.96 லட்சம் மோசடி செய்ததாக அவுரங்காபாத் நகரில் உள்ள டேனிஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் முகமது ஷாஹாப் போலீசில் புகார் அளித்தார். அசாருதீன் மற்றும் இருவருக்காக ரூ.20.96 லட்சம் மதிப்பில் சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும், அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துவதாக கூறி தன்னிடம் மோசடி நிகழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை அசாருதீன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தன் மீது அளிக்கப்பட்ட புகார் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், பிரபலமாகும் நோக்கில் தன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அசாருதீன் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து ரூ.100 கோடிக்கு மன நஷ்ட வழக்கு பதிவிட பேசி வருவதாக அவர் வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.