ரூ.100 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது டிக்டாக் நிறுவனம்!

ரூ.100 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது டிக்டாக் நிறுவனம்!

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு லட்சம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உள்ளதாக டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் உள்ளவர்களை மீட்டெடுக்க பல்வேறு தொழில் நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல சீன நிறுவனங்களும் கொரோனாவை ஒழிக்க மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவ முன்வந்துள்ளன.

அந்தவகையில், பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான டிக்டாக், கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 4 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களும், 2 லட்சம் முகக்கவசங்களும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக, ஜியோமி நிறுவனம் லட்சக்கணக்கான என் – 95 முகக்கவசங்களையும், 15 கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதேபோல, அலிபாபா பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஜாக்மாவும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்திருந்தார். கொரோனா பெருநோய்த்தொற்று சீனாவில் ஏற்பட்டிருந்தாலும், அந்நாடு அதிலிருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.