ரூ.10 ஆயிரத்தில் திருப்பதில் விஐபி தரிசனம்! பக்தர்கள் பரவசம்!

 

ரூ.10 ஆயிரத்தில் திருப்பதில் விஐபி தரிசனம்! பக்தர்கள் பரவசம்!

வருடம் முழுக்கவே திருவிழா கணக்காக லட்சக்கணக்கில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் திருப்பதியில் இனி மணிக்கணக்கில் தரிசனத்திற்காக காத்திருக்கத் தேவையில்லை.  விடுமுறை நாட்களிலும் வழக்கமானதை விட அதிகளவில் பக்தர்களின் கூட்டும் குவியும் திருமலை, திருப்பதியில், திருப்பதி தேவஸ்தானம் புது வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது.

வருடம் முழுக்கவே திருவிழா கணக்காக லட்சக்கணக்கில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் திருப்பதியில் இனி மணிக்கணக்கில் தரிசனத்திற்காக காத்திருக்கத் தேவையில்லை.  விடுமுறை நாட்களிலும் வழக்கமானதை விட அதிகளவில் பக்தர்களின் கூட்டும் குவியும் திருமலை, திருப்பதியில், திருப்பதி தேவஸ்தானம் புது வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி  ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனம் வழங்குவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. தேவஸ்தானத்தின் இந்த திட்டத்திற்கு பக்தர்களிடம் இருந்து வரவேற்பு அதிகரித்துள்ளது. 

tirupathi

இது குறித்து திருமலையில் நடந்த கூட்டத்தில் கூடுதல் தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி தர்மா ரெட்டி பேசும் போது, பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் ஏழுமலையான் கோவில் கட்டி இந்து மதத்தை பரப்ப தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளையை ஏற்படுத்தியது.  இப்படி ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட  அறக்கட்டளை குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு விஐபி தரிசன அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய 89 பேர் நேற்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தனர். இப்படி நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு, ஸ்ரீவகுளாதேவி ஓய்வறையில் தங்குவதற்கு தனியே 50 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.