ரூ.1, ரூ.5, ரூ.10 நாணயங்கள் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?

 

ரூ.1, ரூ.5, ரூ.10 நாணயங்கள் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?

ரூ.1, ரூ.5, ரூ.10 நாணயங்கள் தயாரிக்க ஆகும் செலவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

மும்பை: ரூ.1, ரூ.5, ரூ.10 நாணயங்கள் தயாரிக்க ஆகும் செலவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

நாணயங்கள் தயாரிக்க ஆகும் செலவுகள், ஆண்டுக்கு எவ்வளவு நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டது. அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், ரூ.1 நாணயம் தயாரிக்க ரூ.1.11 செலவாகிறது, ரூ.2 நாணயம் தயாரிக்க ரூ.1.28, ரூ.5 நாணயம் தயாரிக்க ரூ.3.69, ரூ.10 நாணயம் தயாரிக்க ரூ.5.54 செலவாகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நாணயங்கள் தயாரிப்பது குறைந்து விட்டது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2016 – 17 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 220 கோடி நாணயங்களும், 2015 – 16 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 215 கோடி நாணயங்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 1 ரூபாய் நாணயங்கள் உற்பத்தியும் 90 கோடி நாணயங்களில் இருந்து 63 கோடி நாணயங்களாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.