ரூ 1 கோடி சேவை வரி செலுத்துவதில் சீட்டிங்…நடிகர் விஷாலை எச்சரித்த நீதிபதி..

 

ரூ 1 கோடி சேவை வரி செலுத்துவதில் சீட்டிங்…நடிகர் விஷாலை எச்சரித்த நீதிபதி..

சேவை வரி செலுத்துவதில் மோசடி செய்தது தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்கு விலக்கு கேட்ட நடிகர் விஷாலை எச்சரித்த நீதிபதிகள் நீதிமன்றம் எப்போது ஆணையிட்டாலும் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

சேவை வரி செலுத்துவதில் மோசடி செய்தது தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்கு விலக்கு கேட்ட நடிகர் விஷாலை எச்சரித்த நீதிபதிகள் நீதிமன்றம் எப்போது ஆணையிட்டாலும் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பலமுறை டிமிக்கி கொடுத்துவிட்டு, ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாத வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால்  நேற்று ஆஜரானார். வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நடிகர் விஷால் ₹1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என கூறி, சேவை வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் விஷால் ஒரு முறை கூட நேரில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆடிட்டர் மட்டுமே ஆஜராகி வந்துள்ளார். இதனால் சேவை வரித்துறையினர். விசாரணைக்கு நேரில் ஆஜராகாத விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதனையடுத்து, விஷாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி கடந்த வாரம், அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, சூழ்நிலை காரணமாக சேவை வரி தொடர்பாக ஆஜராக முடியவில்லை என்றும் மேலும் தனது தரப்பில் ஆடிட்டர் ஆஜராகி வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நான் எந்த குற்றமும் செய்யவில்லை. விசாரணை மூலம் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருதரப்பு வக்கீல்களும் தொடர்ந்து சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் கடந்த முறை விசாரணையின் போது நீதிபதி, விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி விஷால் நேற்று காலை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஹெர்மிஸ் முன்பு ஆஜராகினார். அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர்கள், விஷால் நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனுதாக்கல் செய்தனர். அதற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி விஷாலுக்கு அப்படி விலக்கு அளில்லமுடியாது. அவர் நீதிமன்றம் அழைப்பு விடுக்கும்போது கண்டிப்பாக ஆஜாராகியே தீர வேண்டும் என உத்தரவிட்டனர்.  இதனால், விஷால் தரப்பு விலக்கு கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றனர். பின்னர் வழக்கு வரும் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.