ரூபாய் மதிப்பிழப்பு நடந்து 3 ஆண்டுகள் கடந்த பிறகும் மவுசு குறையாத ரொக்க புழக்கம்

 

ரூபாய் மதிப்பிழப்பு நடந்து 3 ஆண்டுகள் கடந்த பிறகும் மவுசு குறையாத ரொக்க புழக்கம்

ரூபாய் மதிப்பிழப்பு நடந்து சுமார் 3 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்கள் மத்தியில் ரொக்க பணம் புழக்கம் அதிகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை வேகம் எடுத்துள்ளபோதிலும், மக்கள் பணத்தை ரொக்கமாக செலவிடதான் விரும்புகின்றனர்

கருப்பு பணம், ஊழல், லஞ்சம் போன்றவற்றை ஊழிக்கும் நோக்கில், மத்திய அரசு 2016 நவம்பரில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. மேலும், ரொக்க பண புழக்கத்தை குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ரூபாய் மதிப்பிழப்பு

இருப்பினும் ரொக்க புழக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துதான் வருகிறது. ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை முன்பாக 2016 நவம்பர் 4ம் தேதியில் ரூ.17.74 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது. அதன் பிறகான 3 ஆண்டுகளில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கினர். ஆனாலும் ரொக்க புழக்கம் அதிகமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 

2019 ஜூலை நிலவரப்படி, நம் நாட்டில் ரூ.21.61 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. 2018 ஜூலையில் ரூ.19.1 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. 2019 மே மாதத்தில் இந்தியாவில் 2,06,819 லட்சம் ஏ.டி.எம்.களில் 81.5 கோடி டெபிட் கார்ட் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. 2018 மே மாதத்தில் 2,06,989 ஏ.டி.எம்.களில் 74.8 கோடி டெபிட் கார்ட் பரிவர்த்தனைகள் நடந்தது. 

ஏ.டி.எம்.

ஆக கடந்த ஒராண்டில் ஏ.டி.எம்.கள் எண்ணிக்கை குறைந்த போதிலும், டெபிட் கார்ட் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஆக, என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தற்போது அதிகரித்தாலும் ரொக்க பயன்பாடுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என தெரிகிறது.