ரூபாய் நோட்டு மதிப்பை சொல்லும் மொபைல் செயலி! ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி!

 

ரூபாய் நோட்டு மதிப்பை சொல்லும் மொபைல் செயலி! ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி!

பார்வை குறைபாடு உள்ள நபர்களுக்காக ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் கண்டு சொல்லும் புதிய மொபைல் செயலியை (அப்) ரிசர்வ் வங்கி விரைவில் வெளியட உள்ளது.

நம் நாட்டில் தற்போது ரூ.10,20,50,100,200, 500 மற்றும் 2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. மேலும் ரூ.1 நோட்டையும் மத்திய அரசு வெளியிடுகிறது. இது, தவிர ரூ.1,2,5,10 நாணயங்களும் புழக்கத்தில் உள்ளன. விரைவில் ரூ.20 ரூபாய் நாணயத்தையும் மத்திய அரசு வெளியிட உள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி

ரூபாய் நாணயங்களின் மதிப்பை பார்வை குறைபாடு உள்ளவர்கள் அதனை தொட்டு உணர்ந்து  கண்டுபிடித்து விடலாம். ஆனால், ரூபாய் நோட்டு மதிப்புகளை அடையாளம் காணுவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கிறது. தற்போது ரூ.100 மற்றும் அதற்கு மேல் மதிப்பலான ரூபாய் நோட்டுகள் இன்டாக்லியோ முறையில் அச்சிடபடுகின்றன. மேலும், ரூபாய் நோட்டு தடைக்கு பிறகு தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் அளவிலும், வடிவத்திலும் புதியவை.

இந்தியாவில் சுமார் 80 லட்சம் பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது. அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பணப் பரிவர்த்தனையில் சந்திக்கும் இடர்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி உணர்ந்துள்ளது. அதனால், இதற்கு தீர்வு காணும் நோக்கில், தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணும் புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.

மொபைல் செயலி

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், பார்வையாளர் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், ரூபாய் மதிப்பை கண்டறியும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனின் கேமரா முன்பு ரூபாய் நோட்டை காண்பித்தால் அந்த செயலி அந்த ரூபாய் நோட்டின் மதிப்பை சொல்லும். மேலும், கேமரா முன் ரூபாய் நோட்டை சரியாக வைக்கவில்லை என்றாலும் உடனே தெரிவிக்கும். இந்த செயலியால் 80 லட்சம் பேர் பலன் பெறுவர் என்று தெரிவித்தது. 

அதேசமயம், ரூபாய் நோட்டு மதிப்பை அடையாளம் செயலி எப்போது அறிமுகம் ஆகும் என்ற தகவலை ரிசர்வ் வங்கி சொல்லவில்லை.