ரூட் மாறும் நடிகை ஐஸ்வர்யா ராய்! பணத்தை பெருக்க பலே ஐடியா!

 

ரூட் மாறும் நடிகை ஐஸ்வர்யா ராய்! பணத்தை பெருக்க பலே ஐடியா!

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளார்.

பொதுவாக நடிகர், நடிகைகள் தங்களது வருமானத்தில் ரியல் எஸ்டேட், விலையுயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றில் அதிகளவில் முதலீடு செய்வது வாடிக்கை. அதுதவிர, துபாய் போன்ற நாடுகளில் வீடு வாங்குவதும் உண்டு. ஆனால் சமீபகாலமாக நடிகர், நடிகைகள் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. உதாரணமாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார். நடிகர் அக்சய் குமார் கோகி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.

ஸ்டார்ட்அப் நிறுவனம்

அதுபோல், தற்போது நடிகர் அமிதாப்பச்சனின் மருமகளும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அம்பீயில் முதலீடு செய்துள்ளார். காற்றின் தரத்தை டேட்டாவை பயன்படுத்தி அளவிடும் நிறுவனம் அம்பீ. கடந்த 2017ம் ஆண்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில்தான் ஐஸ்வர்யா ராயும், அவரது அம்மா விரிந்தா கே.ஆரும் ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளனர்.

அக்சய் ஷோஷி

ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்வது இதுதான் முதல்முறை. இது குறித்து ஐஸ்வர்யா ராய் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல் அம்பீ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக்சய் ஷோஷியும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.