ரூட்டு தல பிரச்னையை கிளப்பிவிடும் எக்ஸ் ரூட்டு (தறு)தலைகள்!

 

ரூட்டு தல பிரச்னையை கிளப்பிவிடும் எக்ஸ் ரூட்டு (தறு)தலைகள்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுக்க கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. காவல்துறையும் உடனடியாக தங்கள் காவல் ”கட்டுப்போடும்’ அறைமூலம் தகவல் பெற்று மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு முறைவாசல் செய்தது.

சென்னையில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் அரசாங்கம் ஒரு நம்பர் போட்டு பேருந்து விட்டால், அவ்வழியில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் பேருந்தை, அவர்கள் அப்பன் வீட்டு சொத்துப்போல் ஆடிப்பாடுவதும், சக பயணிகளுக்கு இம்சைகள் தருவதும், பஸ் டே கொண்டாடுவதும், ரூட்டு தல பதவிக்காக அவர்களுக்குள் வெட்டுக்குத்து என அராஜகம் செய்வதும் உச்சத்தை எட்டியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட சம்பவம் தமிழகம் முழுக்க கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. காவல்துறையும் உடனடியாக தங்கள் காவல் ”கட்டுப்போடும்’ அறைமூலம் தகவல் பெற்று மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு முறைவாசல் செய்தது.

Students violence

இனிமேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படகூடாது என்பதற்காக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் தலைமையில், அடிக்கடி அசம்பாவிதங்களில் ஈடுபடும் பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, புதுக்கல்லூரி முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த மூன்று கல்லூரிகளுக்கும் சென்னையின் 90 வழித்தடங்களில் இயக்கப்படும் மாணவர்கள்மூலம் கல்லூரிக்கு வரும்போது, ரூட்டு தல பிரச்னை காரணமாக அடிதடி ஏற்படுவதும், ரூட்டு தலயாக இருந்த‌ முன்னாள் மாணவர்கள் இந்த அடிதடிகளை ஊக்குவிப்பதும் கண்டறியப்பட்டது. இதுபோல் அசம்பாவிதங்களில் ஈடுபடும் மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்கவேண்டும் என்றும், உறுதிமொழியை மீறி அசம்பாவிதங்களில் ஈடுபட்டால், கைது நடவடிக்கை உறுதி எனவும் இணை ஆணையர் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.