ரீ மேக் காமெடிகள்..எம்.ஜி.ஆர் கட்டப்பொம்மனாக நடித்திருந்தால் கதையே மாறியிருக்கும்..!

 

ரீ மேக் காமெடிகள்..எம்.ஜி.ஆர் கட்டப்பொம்மனாக நடித்திருந்தால் கதையே மாறியிருக்கும்..!

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடம் வெளிவந்த போது அது தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.சிவாஜிக்கு கெய்ரோ படவிழாவில் சிறந்த நடிகர் பரிசு வழங்கப்பட்டது.அதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி. அன்றைய ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்களான மார்லன் பிராண்டோ, மெக்கின்னாஸ் கோல்டு புகழ் யூல் பிரைனர்,டென் கமாண்ட்மெண்ட்ஸ் புகழ் சார்ல்ஸ்ட்டன் ஹெஸ்டன் போன்றவர்களோடு வேட்டி கட்டிய சிவாஜி படம் எல்லா பத்திரிகைகளிலும் , குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைபடம் வெளிவந்த போது அது தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.சிவாஜிக்கு கெய்ரோ படவிழாவில் சிறந்த நடிகர் பரிசு வழங்கப்பட்டது.அதற்காக அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி. அன்றைய ஹாலிவுட் சூப்பர்ஸ்டார்களான மார்லன் பிராண்டோ, மெக்கின்னாஸ் கோல்டு புகழ் யூல் பிரைனர்,டென் கமாண்ட்மெண்ட்ஸ் புகழ் சார்ல்ஸ்ட்டன் ஹெஸ்டன் போன்றவர்களோடு வேட்டி கட்டிய சிவாஜி படம் எல்லா பத்திரிகைகளிலும் , குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகளில் வந்தது.

veerapandiya kattabomman

இதைப் பார்த்து எரிச்சலடைந்த எம்ஜிஆர் ரசிகர்கள் சொன்னார்களாம்,
‘எம்ஜிஆர் மட்டும் கட்டபொம்மன் வேடத்தில் நடித்திருந்தால், வெள்ளைக்காரனை எல்லாம் வெட்டிப்போட்டுட்டு குதிரைல ஏறிப் போய்கிட்டே இருந்திருப்பார்!’ என்று.

இது சாதாரண எம்ஜிஆர் ரசிகன் சொன்னது.ஆனால்,நமது தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்களும் நடிகர்களும் கூட அதே லெவலில்தான் சிந்திக்கிறார்கள்.அதற்கு காலகாலமாக பலியாகும் அப்பாவி பிரபல மலையாள நடிகர் , எழுத்தாளர்,இயக்குநர் சீனிவாசன்.ஆள் ரொம்பவும் சுமார் மூஞ்சி குமார்தான்.கருப்பு,சிறிய உருவம்,ஆனால் 35 வருடமாக மலையாள சினிமாவின் அசைக்க முடியாத கதாசிரியர்.

இவர் எழுதி நடித்து வெளிவந்த மலையாளப்படம் பாவம் பாவம் ராஜகுமாரன்.படு சாதாரண உருவமுள்ள சீனிவாசனை, கடலோரக் கவிதை ரேகா காதலிப்பதாக கதைவிட்டு அவருடைய நண்பர்களே அவரை ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாக்குவதாக கதை.

pavam pavam rajkumaran

பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்சன் இதை தமிழில் ரீமேக் செய்தார்.நாயகன் யார் தெரியுமா? அன்றைய சாக்லெட் பாய் கார்த்திக்!.இளையராஜாவின் ஹிட் பாடல்கள் இருந்தும் படம் வெற்றி பெறவில்லை! இந்த ராசி ஒரு கெட்ட ஆவிபோல் சீனிவாசனத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ் கொஞ்சம் சவுண்ட் பார்ட்டி என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகர் என்பதில்.யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.ஒரு பட்த்தை ரீமேக் செய்யும் போது அதன் ஆன்மாவை விட்டுவிட்டு தட்டையாக படமெடுப்பதில் அவருக்கு இணையே இல்லை.

அதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவரது வெள்ளித்திரை.!இதுவும் சீனிவாசனின் ஸ்கிரிப்ட்தான்.’உதயானானு தாரம்’ என்பது படத்தின் பெயர்.உதயன்தான் நட்சத்திரம் என்பது பொருள்.

sreenivasan

நடிப்பாசையால் கோடம்பாக்கத்தின் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருக்கும்  சீனிவாசன்  படத்தின் துவக்கத்தில் ரஜினி காந்தின் கட்- அவுட்டைப் பார்த்து “‘ என்னை விட கருப்பு,இன்னும் நோஞ்சான்,ஆனாலும் சூப்பர்ஸ்டார்..ம்’ என்று பெருமூச்சு விடுவார்.கதையே அதுதான்,தங்க இடம் கொடுத்த நண்பன் உதயன் ( மோகன் லால்) கதையை திருடிக்கொண்டு போய் ஒரு தயாரிப்பாளரிடம் கொடுப்பார் சீனிவாசன்.அவருக்கு கதைபிடித்துப் போக என்னை ஹீரோவாக்கினால்தான் கதையைத் தருவேன் என்று கண்டிஷன் போட்டு ஹீரோவாகும் சீனிவாசன் , கடைசியில் உதயனைப் போன்ற கிரியேட்டர்கள்தான் ஸ்டார் என்று ஒப்புக் கொள்வதாக முடியும்.மலையாளத்தில் சூப்பர்ஹிட்!

அதன் ரீமேக் உரிமையை வாங்கிய பிரகாஷ்ராஜ், தானே நடித்து தனது கம்பெனி எழுத்தாளரை இயக்குநர் ஆக்கியது வரை சரி.ஆனால்,அவ மோகன்லாலின் கதா பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும்.ஆனால் பிரகாஷ் சீனிவாசனின் கதா பாத்திரத்தை தேர்ந்தெடுத்த அந்த விநாடியிலேயே படம் அவுட்.பிரகாஷ் ராஜுக்கென்ன குறை.ஹீரோ போலதானே இருக்கிறார். அந்தப்படம் தோற்றது அங்கேதான்.அந்தக் கேரக்ட்டரில் பசுபதி,அல்லது வடிவேல் நடித்திருது,தனக்கு ஜோடியாக நயன்தாராதான் வேண்டும் என்று பந்தா பண்ணி இருந்தால் அது தமிழின் முக்கியமான நகைச்சுவைப்படமாக ஆகி இருக்கும்.தவிர , அந்தப் படத்தில் சீனிவாசன் மோகன் லாலையும் மம்முட்டியையும் நிறைய கிண்டல் அடிப்பார்.வாய்ப்புக் கேட்டு பலகாலம் பட்டினியாய் அலைந்தவனின் வன்மம் அதில் வெளிப்பட்டு இருக்கும்.

mozhi

அடுத்து சீனிவாசனின் இன்னொரு வெற்றிகரமான படத்தைக் கெடுத்த புன்னியவான் ரஜினிகாந்த்!

சீனிவாசன் எழுதி ஒரு எளிய,ஆனால் கொஞ்சம் வாய் நீளமுள்ள பார்பராக,ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.அந்த ஊருக்கு அவரது பால்யகால நண்பனும் இன்றைய சூப்பர் ஸ்டாருமான மம்முட்டியின் படப்பிடிப்பு நடப்பதும்,பார்பர் பாலனும்,சூப்பர் ஸ்டார் அசோகனும் சந்திப்பதுதான் கதை.படத்தின் பெயர்’ கத பறையும்போல்’!

இதை பி.வாசு இயக்கத்தில் ரீ மேக் செய்தபோது,சீனிவாசனின் வேடத்தில் நடிக்க ரஜினி தேர்ந்தெடுத்தது பசுபதியை. எவ்வளவு நல்ல நடிகராக இருந்தாலும் மக்கள் , தாழ்வு மனப்பான்மை உள்ள ஏழை பார்பர் பாலனாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. ரஜினிக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதற்காக பசுபதி கதாபாத்திரத்தின் காட்சிகளை குறைத்ததும் இன்னொரு காரணம்.தங்கள் ஊர் பார்பர் பாலன் சூப்பர் ஸ்டாரின் நண்பன் என்று தெரிந்ததும் அவனைப் புகழ்ந்து ஊர்மக்கள் பாடுவதாக பாட்டெல்லாம் உண்டு.

kuselan

இப்போது நினைத்துப் பாருங்கள், அந்த பார்பர் கேரக்ட்டரில் வடிவேல் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

இது,தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று.சுஜாதாவின் துப்பறியும் நாவல்களில் அன்றைய வாசகர்களைக் கவர்ந்த ஒரு கதாபாத்திரம் லாயர் கனேஷின் ஜூனியர் வசந்த்.புத்திசாலியான ஒரு பிளேபாய் கேரக்ட்டர் அது.அந்தக் கதாபாதிரத்தில் வென்னிற ஆடை மூர்த்தியை நடிக்க வைத்து அழகுபார்த்தவர்கள் நமது இயக்குநர்கள்.

எம்.ஜி.ஆர் ‘யாதோன்கி பாரத்’ படத்தை தமிழில் எடுத்தபோது தர்மேந்திரா, விஜய் அரோரா கதாபாத்திரங்களில் தானே இரட்டை வேடத்தில் நடித்தார். 
கிளப்களில் குடும்பப் பாடலான ‘ நாளை நமதே’ பாட்டை பாடிப்பாடி அண்ணன்களை தேடும் தாரிக் கான் வேடத்தில் அன்று கமலஹாசனை நடிக்க வைத்திருக்க வேண்டும்.ஆனால்,ஒரு தெலுங்கு நடிகரை நடிக்க வைத்தார்.

nalai namathae

மறுபடியும்  கட்டபொம்மனிடம் வருவோம்.கண்ணதாசன் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை தப்பியோடிவந்து சிவகங்கைச் சீமையில் அடைக்கலமானதும்.அதனால் சிவகங்கை அழிந்ததையும் ‘ சிவகங்கை சீமை ‘ என்கிற பெயரில் படமாக்கி கட்டபொம்மனுக்குப் போட்டியாக களமிறக்கினார்.

அதுவரை மென்மையான உணர்வுகள் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த எஸ்.எஸ் ராஜேந்திரனை அதில் சின்னமருது வேடத்தில் நடிக்கவைத்தார்கள்.ஆனால் எஸ்.எஸ்.ஆரை மக்கள் சின்னமருதுவாக ஏற்றுக்கொள்ளாததால் அது தோல்வியைத் தழுவியது.
ஒரு சரியான கதையில் கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகரைத் தேர்ந்தெடுத்து விட்டாலே பாதி வெற்றி என்கிற சூத்திரத்தை இனி வரும் தலைமுறையாவது கற்றுகொள்வது அவசியம்.