ரீ எண்ட்ரீ கொடுக்கும் தல தோனி; உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள் !!

 

ரீ எண்ட்ரீ கொடுக்கும் தல தோனி; உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள் !!

தொடர்ந்து வெற்றி பாதையில் கம்பீரமாக பயணித்து வந்த சென்னை அணி, ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில் தோல்வியடைந்ததற்கு கடந்த போட்டியில் தோனி  விளையாடாததே ஒரே ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான இன்றைய போட்டியின் மூலம் தல தோனி மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளார். 

ஐ.பி.எல் டி.20 தொடர் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வரும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 7 போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

தொடர்ந்து வெற்றி பாதையில் கம்பீரமாக பயணித்து வந்த சென்னை அணி, ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில் தோல்வியடைந்ததற்கு கடந்த போட்டியில் தோனி  விளையாடாததே ஒரே ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் தோனி விரைவில் பூரண உடற்தகுதியுடன் மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். 

இந்த நிலையில் பெங்களூர் அணியுடனான இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு தோனி முழு உடல் தகுதியுடன் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரசிகர்களுக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும் விதமாக தோனி வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சென்னை அணியின் ட்வீட்டிற்கு லைக்களும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.