ரீபண்ட் கிடைக்குமா? ஜெட் ஏர்வேஸ் பயணிகள் கலக்கம்!

 

ரீபண்ட் கிடைக்குமா? ஜெட் ஏர்வேஸ் பயணிகள் கலக்கம்!

ஜெட் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை நிறுத்தி விட்டதால், முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான ரீபண்ட் தொகை எப்போது கிடைக்கும் என பயணிகள் பரிதவிப்பில் உள்ளனர். இந்த நிலையில் எந்த நேரத்திலும் ரீபண்ட் தொகை பயணிகளுக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக விமான துறையில் சிறப்பான வளர்ச்சி கண்டு வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் மிகவும் தள்ளாட தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது சேவை முற்றிலுமாக நிறுத்தியது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்

இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தங்களுக்கு ரீபண்ட் தொகை கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர். பொதுவாக விமான பயணிகள் பயணம் செய்தவற்கு சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்து விடுவர். ஏன்னா விலை குறைவாக இருக்கும் மற்றும் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் தர்மசங்கடமாகி விடும் அதனால் சில மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து விடுவர்.

அப்படி பல மாதங்களுக்கு முன்பே ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல  முன்பதிவு செய்த பயணிகள் இப்பம் சிக்கலில் மாட்டி உள்ளனர். ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை நிறுத்தி விட்டதால் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டார்கள். ஆனால் அதற்கான ரீபண்ட் தொகை அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. சபினா கோம்ஸ் என்ற பயணி மே 10ம் தேதி சிங்கப்பூர் செல்வதற்காக கடந்த ஜனவரியில் ரூ.82,400 செலுத்தி 4 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தார். ஆனால் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை அதற்கு முன்பாகவே நிறுத்தி விட்டது. 

விமான நிலையம்

ஜெட் ஏர்வேஸ் தனது கடைசி விமான சேவையை நிறுத்தியதற்கு முந்தைய நாள் சபினா முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து ரீபண்ட் தொகையை கேட்டார். ஆனால் ரீபண்ட் தொகையை கொடுத்து விட்டதாகவும், அதற்கான ரசீது நம்பரையும் ஜெட் ஏர்வேஸ் கொடுத்தது. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் இன்னும் தனக்கு ரீபண்ட் தொகை கிடைக்கவில்லை என்று சபினா கூறுகிறார். இவரை போல் பல ஆயிரம் பேர் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

அதேசமயம், ஏப்ரல் 17ம் தேதிக்கு முன்பு ரீபண்ட் கேட்டு தாக்கல் செய்த டிராவல் ஏஜெண்டுகளுக்கு 100 சதவீதம் ரீபண்ட் தொகை கிடைத்து விட்டது. விரைவில் அவர்கள் அதனை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள் என இத்துறையை சேர்ந்த ஒருவர் கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக வங்கிகள் தரப்பு கூறுகையில், பயணிகள் கார்ட் மூலம் பணம் செலுத்தி இருந்தால், வாடிக்கையாளர்கள் வங்கியிடம் பிரச்சினை தீர்வு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். வங்கிகளுடன் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி, நிறுவனம் சேவை அளிக்கவில்லை என்றால் அந்த நிறுவனத்தின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். ஆனால் ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் அது சாத்தியமா என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் ஜெட் ஏர்வேஸ் தற்போது திவால் நடவடிக்கையில் இருப்பதை காரணம் என வங்கி கூறுகிறது.