ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஜிகாஃபைபர் ப்ரீவியூ சலுகை விவரங்கள் வெளியானது

 

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஜிகாஃபைபர் ப்ரீவியூ சலுகை விவரங்கள் வெளியானது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள் வெளியாகியுள்ளது

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அதிகளவு முன்பதிவு பெறும் பகுதிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரீவியூ சலுகையின் படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்துவோருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு வேகத்தை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 90 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி டேட்டா பிரீவியூ சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவில் மாதம் 100 ஜிபி என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், 100 ஜிபி டேட்டாவை ஒரே மாதத்திற்குள் பயன்படுத்திவிட்டால், பிரீவியூ சலுகையில் மைஜியோ ஆப் அல்லது ஜியோ வலைத்தளம் மூலம் சேர்பவர்களுக்கு 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தில் டேட்டா வேகத்தை பொருத்த வரை நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தை பயன்படுத்த பாதுகாப்பு முன்பணமாக ரூ.4,500 செலுத்த வேண்டும். 90 நாட்கள் பிரீவியூ திட்டம் நிறைவுற்றவுடன் வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் திட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்படும். சேவையை தொடர விருப்பமில்லாதவர்கள் தங்களது சேவையை துண்டித்து, பாதுகாப்பு முன்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.