ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் முன்பதிவு செய்வது எப்படி? 

 

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் முன்பதிவு செய்வது எப்படி? 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வரவிருக்கும் ஜியோ ஃபைபர் சேவையானது அதன் ஹைப்ரிட் செட்-டாப்-பாக்ஸ் (எஸ்டிபி) வழியாக லைவ் டிவி சேவை உட்பட பலவற்றை வழங்கும் என்று முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். உரையின் போது, அவர் குறிப்பிட்ட ஹைப்ரிட் செட்-டாப்-பாக்ஸ் ஆனது பயனாளர்களுக்கு மிகவும் புதிய சமாச்சாரமாக இருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சேவை செப்டம்பர் 5ம் தேதி முதல் வணிக ரீதியாக தொடங்கப்பட உள்ளது.

JIO

பல புதிய அம்சங்களை உள்ளடக்கிய ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் சேவை, தொலைபேசி இணைப்புடன், முதல் இரு மாதங்களுக்கு தன் பயனாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவச சேவையை அளிக்க முன்வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரீம் டிடிஎச் வழியாக பகிரப்பட்டுள்ள ரிலையன்ஸின் ஜியோ  படங்களில் காணப்படும் ஜியோ ஹைப்ரிட் எஸ்டிபி ஆனது நீல நிறத்தில் உள்ளது. தற்போது வரையிலாக, இதன் மென்பொருள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஜியோ ஹைப்ரிட் எஸ்டிபி ஆனது ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ன் கீழ் இயங்கும் என்று கருதப்படுகிறது. 
நீங்கள் இதுவரையில் ஜியோ ஃபைபர் சேவைக்காக முன்பதிவு செய்யவில்லை என்றால், பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றி ஜியோ ஃபைபர் சேவைக்காக முன்பதிவு செய்யலாம். 
1.முதலில் ஜியோஃபைபருக்கான இணைப்புக்காக பதிவு செய்வதற்காக https://gigafiber.jio.com/registration என்கிற வலைத்தளத்திற்குள் நுழையவும். .
2. இந்த வலைத்தளத்தினுள் நுழைந்த பின்னர் கேட்கப்பட்டுள்ள உங்களது பெயர், விலாசம், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை பூர்த்தி செய்யவும்.
3. ஒருமுறை நீங்கள் உங்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு, பதிவு செய்யப்பட்டுள்ள உங்களின் மொபைல் எண்ணிற்கு ரகசிய எண் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
இணைப்பை பெறுவதற்கான மற்ற செயல்முறைகள்:
ஏற்கனவே உங்களின் பகுதியில் ஜியோ ஃபைபர் சேவை கிடைக்கப் பெற்றால், உங்களின் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கும் நோக்கத்தின் கீழ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார். இது முடிந்ததும், உங்களுக்கான பிராட்பேண்ட் இணைப்பானது அதே நாளில் கூட செயல்படுத்தப்படலாம்.

JIO

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
ஜியோ ஜிகாஃபைபர் இணைப்பை பெறுவதற்கு உங்களிடம் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற முகவரி சான்றுகளை உள்ளடக்கிய ஆவணங்கள் இருந்தால் போதும். மேலும், சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக உங்கள் படத்தையோ அல்லது யார் பெயரின் கீழ் இணைப்பு எடுக்கப்பட உள்ளதோ அவரின் புகைப்படத்தை நிறுவனத்தின் பிரதிநிதி கிளிக் செய்வார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
மொத்தம் எவ்வளவு செலவு ஆகும்?
ஜியோ வழங்கும் ரவுட்டருக்காக நீங்கள் ரூ.2,500/- என்கிற திரும்ப பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகையை செலுத்த வேண்டும். இது Paytm, UPI, டெபிட் / கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் வழிகளை பயன்படுத்தியே செய்யப்பட வேண்டும்.