ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி இந்தியாவில் எப்போது வெளியாகிறது? – விவரம் உள்ளே

 

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி இந்தியாவில் எப்போது வெளியாகிறது? – விவரம் உள்ளே

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் வெளியீட்டு விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் வெளியீட்டு விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் 4ஜி சேவை பயன்பாடு வேகமாக அதிகரிக்க ரிலையன்ஸ் ஜியோ மிக முக்கிய காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. மற்ற நிறுவனங்களுக்கு முன்பாகவே 5ஜி சேவைகளை முதலில் வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள சில இணைய தகவல்களின்படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க ஜியோ திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020-ம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.