ரிலீஸ் ஆன கொஞ்ச நேரத்தில் ‘தம்பி’யை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி

தம்பி திரைப்படம் தியேட்டரில் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது.
நடிகர் கார்த்தி, ஜோதிகா மற்றும் பலர் நடித்த படம் தம்பி. கைதி படத்துக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், தமிழ் ராக்கர்ஸ் எப்போது வெளியிடுவான் என்று தயாரிப்பாளர்கள் தரப்பு அதிர்ச்சியோடு காத்திருந்தது. படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்தை இணையத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டுவிட்டது என்ற தகவல் தயாரிப்பாளர் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.

thambi

தம்பி படத்தில், கார்த்தி, ஜோதிகாவுடன் சத்யராஜ், சவுகார் ஜானகி, நிகிலா விமல் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை த்ரிஷயம், பாபநாசம் படத்தை எடுத்த ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். 

thambi

ரசிகர்களும் படம் நன்றாக உள்ளது என்றே கருத்து தெரிவித்துள்ளனர். முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாவது பாதி ட்விஸ்ட் ரசிக்கும் வகையில் உள்ளது என்று கலவையான விமர்சனத்தை ரசிகர்கள் வைத்துள்ளனர். தியேட்டரில் வெளியான நேரத்தில் இணையத்தில் வெளியானதில் படக் குழுவினர் மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஆடிப்போய் உள்ளனர்