ரிலீஸ்க்கு தயாரானது கனா நாயகனின் தும்பா திரைப்படம்!

 

ரிலீஸ்க்கு தயாரானது கனா நாயகனின் தும்பா திரைப்படம்!

நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள தும்பா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள தும்பா படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘கனா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தும்பா’. இதில் மூத்த நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்கியுள்ளார்.

thumba

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்றது. வனத்தில் புலிகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளிடையே நாயகன், நாயகி சிக்கிக் கொண்டு மீண்டு வெளிவருவதையும், இந்த உலகத்தில் மனிதனுக்கு வாழ்வதற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறதோ அதேபோன்று காட்டில் வாழும் வனவிலங்குகளுக்கும் உரிமை இருக்கிறது என்பதை வலியுறுத்தும் விதத்திலும் அமைந்திருந்தது. 

இந்நிலையில் இப்படம் வரும் மே 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தை முன்னணி வெளியீட்டு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.