ரியோவின் அடுத்த படம் அறிவிப்பு! ஹீரோயின் யாருன்னு தெரியுமா?

 

ரியோவின் அடுத்த படம் அறிவிப்பு! ஹீரோயின்  யாருன்னு தெரியுமா?

டிவி தொகுப்பாளரும் நடிகருமான ரியோவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டிவி தொகுப்பாளரும் நடிகருமான ரியோவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘கனா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர்  ரியோ ராஜ். ம் இன்று இயக்குநர்  கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ramya

இந்நிலையில்  ரியோ  நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பத்ரி வெங்கடேசன் இப்படத்தை இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே பானா காத்தாடி, செம போத ஆகாத படங்களை  இயக்கியுள்ளார். இதில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு ராஜ கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். 

ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் கவினுக்கு ஜோடியாக நட்புன்னா என்ன தெரியுமா படத்தில்  ரம்யா நம்பீசன் நடித்த நிலையில் தற்போது ரியோவுடன் ஜோடி சேர இருப்பது குறிப்பிடத்தக்கது.