‘ரியல் எஸ்டேட்’ காரரிடம் ரீல் விட்டு 2.5 லட்சம் மோசடி  – ‘பேஸ் புக்’ அழகி அபேஸ்.. 

 

‘ரியல் எஸ்டேட்’ காரரிடம் ரீல் விட்டு 2.5 லட்சம் மோசடி  – ‘பேஸ் புக்’ அழகி அபேஸ்.. 

பெங்களூரின் கல்யாநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .அவரிடம்  லண்டனைச் சேர்ந்த இசபெல்லா என்ற பெண் பெங்களூரின் புறநகரில் 40 ஏக்கர் நிலத்தை ரூ .4 கோடி செலுத்தி வாங்கப்போவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார்

பெங்களூருவில் நிலம் வாங்குவதாக கூறி ,தன்னிடம் அறிமுகமில்லாத ஒரு பெண் ரூ .2.5 லட்சம் மோசடி செய்ததாக 51 வயதான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரின் கல்யாநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .அவரிடம்  லண்டனைச் சேர்ந்த இசபெல்லா என்ற பெண் பெங்களூரின் புறநகரில் 40 ஏக்கர் நிலத்தை ரூ .4 கோடி செலுத்தி வாங்கப்போவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார் .இதுபற்றி அந்த ரியல் எஸ்டேட் அதிபர், “நானும் இஸபெல்லாவும் கடந்த ஆண்டு முதல் பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்தோம். இசபெல்லா பெங்களூருவில்  நிலம் வாங்க என் உதவியை நாடினார். அந்த நிலம் வாங்க அவர் எனக்கு ரூ. 4 கோடி அனுப்புவதாக  என்னிடம்  கூறி, எனது வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து, இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து  சில படிவங்களை எனக்கு மின்னஞ்சல் செய்தார். நான் படிவங்களை பூர்த்தி செய்து அவருக்கு அனுப்பிய பிறகு, சுங்க வரியாக ரூ .2.5 லட்சத்தை  ஒரு கணக்கில் டெபாசிட் செய்யும்படி கேட்டார். நானும் அது உண்மையென நம்பி பணத்தை டெபாசிட் செய்தேன். அதற்கு பிறகு, அவர் என்னுடைய தொடர்பிலிருந்து விலகி விட்டார் , “என்று அவர் போலீசில் புகார் கூறினார். போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .