ரியல்மி சாதனங்களுக்கு ஒருமாத காலம் வாரண்டி நீட்டிப்பு – கொரோனா பாதிப்பால் சலுகை

 

ரியல்மி சாதனங்களுக்கு ஒருமாத காலம் வாரண்டி நீட்டிப்பு – கொரோனா பாதிப்பால் சலுகை

ஊரடங்கு நாட்களின்போது வாரண்டி முடிவடையும் ரியல்மி சாதனங்களுக்கு அதன் வாரண்டி ஒருமாத காலம் நீட்டித்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி: ஊரடங்கு நாட்களின்போது வாரண்டி முடிவடையும் ரியல்மி சாதனங்களுக்கு அதன் வாரண்டி ஒருமாத காலம் நீட்டித்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புகளுக்கும் வாரண்டி காலம் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. ரியல்மி ஸ்மார்ட்போன்கள், அணியக் கூடியவை மற்றும் பல தயாரிப்புகளுக்கு இந்த வாரண்டி நீட்டிப்பு பொருந்தும். இந்த ஆண்டு மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 வரை காலகட்டத்தில் வாரண்டி காலாவதியாகும் ரியல்மி சாதனங்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ttn

மேலும் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய ரியல்மி சாதனங்களுக்கு மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரை காலகட்டத்தில் மாற்று காலம் (Replacement Period) இருந்தால், அவற்றுக்கும் 30 நாட்கள் வரை மாற்று நாட்கள் நீட்டித்துள்ளதாக ரியல்மி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த நடவடிக்கையை ரியல்மி நிறுவனம் எடுத்துள்ளது.