ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு!ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு!

 

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு!ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு!

ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் நிதிக்கொள்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாலான நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கி 2 மாதத்துக்கு ஒரு முறை நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தை நடத்துகிறது. அந்த கூட்டத்தில்தான் முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறித்து முடிவு எடுக்கும். கடந்த ஜூன் மாதம் நிதிக்கொள்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி

ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெற்ற உள்ள ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திலும் முக்கிய கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைக்கும் என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வளர்ச்சி குறைவாக உள்ளது, சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்த கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக உள்ளது போன்றவற்றை அதற்கு காரணமாக கூறுகின்றனர்.

சக்திகந்த தாஸ்

ரிசர்வ் வங்கி அடுத்த நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைத்தால், ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கிதான் அதிகமாக வட்டி குறைப்பு செய்த வங்கியாக இருக்கும். இதேபோல் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் சர்வதேச பொருளாதார மந்தநிலை வந்த போது இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியை சிறிது காலத்துக்கு குறைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்தாலும், வங்கிகள் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தால் மட்டுமே ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைக்கு பலன் இருக்கும்.