ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஏழைகளுக்கு உதவும் வகையில் உள்ளது! – மோடி மகிழ்ச்சி

ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஏழைகளுக்கு உதவும் வகையில் உள்ளது! – மோடி மகிழ்ச்சி

ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வங்கிகள் கடன் வழங்க ஊக்குவிக்கப்படுவதாகவும் நபார்டு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதாகவும் அறிவித்தார். 

ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் ஏழைகள், விவசாயிகள் உள்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வங்கிகள் கடன் வழங்க ஊக்குவிக்கப்படுவதாகவும் நபார்டு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதாகவும் அறிவித்தார். 

sakthi-kantha-dass-67

இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடைய ட்வீட் பதிவில், “ரிசர்வ் வங்கியின் இன்றைய அறிவிப்புகள் பணப்புழக்கத்தைப் பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை மேம்படுத்தும். இந்த நடவடிக்கைகள் நம்முடைய சிறு வணிகங்கள், எம்.எஸ்.எம்.யுக்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவும்.டபிள்யு.எம்.ஏ வரம்பை அதிகரித்திருப்பதன் மூலம் இது அனைத்து மாநிலங்களுக்கும் உதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.