ரிசர்வ் வங்கியை காப்பாற்றவே உர்ஜித் பட்டேல் ராஜினாமா: ராகுல் காந்தி பேட்டி

 

ரிசர்வ் வங்கியை காப்பாற்றவே உர்ஜித் பட்டேல் ராஜினாமா: ராகுல் காந்தி பேட்டி

ரிசர்வ் வங்கியை காப்பாற்றுவதற்காகவே, உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி: ரிசர்வ் வங்கியை காப்பாற்றுவதற்காகவே, உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகளால் தனது ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக உர்ஜித் பட்டேல் இன்று மாலை அறிவித்தார். அவரின் இந்த முடிவு, வங்கித் துறைக்கு பேரிழப்பாகும் என பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் மீதான மத்திய அரசின் தாக்குதலை தடுக்க எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். ரிசர்வ் வங்கியை காப்பாற்றுவதற்காகவே, உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பது பெருமையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து ராகுல் கூறுகையில், எங்களின் இலக்கு பாஜகவை வீழ்த்துவதும், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் அமைப்புகளை பாதுகாப்பதுமே ஆகும். அதற்கான பாதையில் பயணிக்கிறோம் என தெரிவித்தார்.