ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்

 

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நீடித்து வந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேல் அதிரடியாக பதவி விலகினார்.

அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் பதவி விலகியதையடுத்து, அந்த பதவிக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்த சக்திகாந்த தாஸ், கடந்த ஆண்டு மே மாதம் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். தமிழகத்தில் தொழில்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள சக்தி காந்ததாஸ், தற்போது நிதி ஆணையத்தின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அடுத்த 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.