ரிக்‌ஷா ஓட்டுநருடன் ஒன்றாக சுற்றித் திரியும் காகம்! நெகிழ வைக்கும் நட்பு!

ரிக்‌ஷா ஓட்டுநருடன் ஒன்றாக சுற்றித் திரியும் காகம்! நெகிழ வைக்கும் நட்பு!

வளர்ப்பு பிராணிகளில் நாய் நன்றியுடையது என்று படித்திருக்கிறோம். எல்லோரும் செல்லமாக வீட்டில் நாய், ஆடு, மாடு, கிளி போன்றவைகளை வளர்ப்பார்கள். இன்னும் சிலர் பூனைகளைக் கூட வளர்த்து வருவார்கள். ஆனால், புதுச்சேரி  அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் கடந்த 20 வருடங்களாக ரிக்‌ஷா ஓட்டி வரும் செல்வராஜ், ஆசையாசையாய் ஒரு காகத்தை வளர்த்து வருகிறார்.

selvaraj

அந்தப் பகுதியில் ரிக்‌ஷா ஓட்டி வரும் செல்வராஜ், கடந்த 5 வருஷங்களுக்கு முன்பு சாவரிக்கு சென்றுவிட்டு திரும்ப வரும் வழியில், அடிபட்டு பறக்க முடியாமல் கீழே விழுந்து கிடந்த காகத்தைப் பார்த்துள்ளார். மீண்டும் பறக்க முயற்சித்தும் முடியாமல் தொடர்ந்து காகம் சிரமப்படுவதைப் பார்த்து மனமிறங்கிய செல்வராஜ், பின்னர், அந்த காகத்தை தன்னுடன் எடுத்து சென்றார். வீட்டிற்குக் கொண்டு சென்று, அதற்கு மருத்துவ உதவிகள் செய்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அதற்கு உணவு கொடுத்து, பாதுகாப்பாக பராமரித்து வந்திருக்கிறார். அதன் பின்னர், காகத்தின் உடல்நிலை தேறியதும், அதை மீண்டும் பறக்க விட்டுள்ளார். அன்றிலிருந்து அந்த அதிசயம் நிகழத் துவங்கியது. 

crow

எங்கு பறந்து திரிந்தாலும், தினந்தோறும் செல்வராஜ் இருக்கும் ரிக்‌ஷா ஸ்டாண்டிற்கு வந்து விடுகிறது. செல்வராஜ், சவாரிக்கு சென்றிருந்தாலும் திரும்ப வரும் வரையில் காத்திருக்கிறது. செல்வராஜ் உணவருந்தும் போது, அவரிடம் இருந்து உணவை சேகரிக்கும் காகம், தன்னுடைய குஞ்சுகளுக்கு கொடுத்து விட்டு, பின்னர் அவருடன் சேர்ந்து உணவருந்துகிறது. இதனை ஆரம்பத்தில் ஆச்சர்யமாக பார்த்த பிற ரிக்‌ஷா ஓட்டுநர்கள், இப்போது தாங்கள் சாப்பிடும் நேரங்களில் அந்த காகத்திற்கு அவர்களும் உணவளித்து வருகின்றனர். மற்றவர்களை விட தன்னைக் காப்பாற்றிய செல்வராஜிடமே அந்தக் காகம் மிகவும் பாசத்தோடும், நட்போடும் பழகி வருகிறது.