ரிக்ஷாக்காரன் சங்கம் கூட நல்லா இருக்கு: தயாரிப்பாளர் சங்கம் குட்டிச்சுவரா இருக்கு!

 

ரிக்ஷாக்காரன் சங்கம் கூட நல்லா இருக்கு: தயாரிப்பாளர் சங்கம் குட்டிச்சுவரா இருக்கு!

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் பழனிவேல் பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.

சென்னை: தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் பழனிவேல் பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடித்துள்ள பேய் படம் பொட்டு. இந்த படத்தில் நமீதா, இனியா, ஸ்ருஷ்டி டாங்கே, ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி 2017ம் ஆண்டின் துவக்கத்திலேயே போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்தது. இப்படத்தின் பட ரிலீஸ் தள்ளிப் போய், தள்ளிப் போய் ஒரு வழியாக 4 வருடம் களைத்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 

pottu

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ்க்கு ஆதரவாக தயாரிப்பாளர் பழனிவேல் தயாரிப்பாளர் சங்கத்தை பற்றிய குமுறலுடன் பேசும் ஆடியோ வெளியானது, அதில் ‘தயாரிப்பாளர் சங்கம் எங்க போச்சினே தெரியல, அழுவதா சிரிப்பதா என்று கூட தெரியல. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குட்டிச்சுவரா  போயிடுச்சி. பொட்டு பட ரிலீஸ்காக எத்தனை பேரிடம் கெஞ்சுவது ஒருத்தரும் வரவில்லை. மிக பெரிய கொடுமை. எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் யூனினில்  ஆளு இல்லைனு சொல்றாங்க. மொத்தத்தில் குட்டிச்சுவரா ஆகிவிட்டது. வயிறு எரியுது. இந்த மாறி ஒரு யூனியனை உலகத்திலே எங்கயும் பார்த்தது இல்லை. மனசாட்சி இருக்காங்க? ரொம்ப தப்பு! தயாரிப்பாளராக இருக்கும் ‘ஆயிரத்தி முன்னுறு’ பேரும் தயாரிப்பாளரே இல்லை. ராத்திரில போன் பண்ணா, குடிச்சிட்டு பேசுறான் அப்படினு சொல்லுறாங்க.  ஏன் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தை வீணடிச்சி வெச்சிருக்கீங்க? ரொம்ப வேதனையா இருக்கு, போன் பண்ணா எடுக்காத கவுன்சில் தான் தமிழ் திரைப்பட கவுன்சில்’ என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.